சென்னை கொளத்தூர் அடுத்த பெரவள்ளுர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 35). பெயின்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் பிரீத்தி (வயது 28). இவர்களுக்கு லியா (வயது 7), சுபிக்ஷா (வயது 4) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களது குடும்பத்தில் கணவன் - மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுக்றது. மேலும் பிரீத்திக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரதீப் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதுகுறித்து மனைவி, ஆண் நண்பர் மீது கடந்த 2 மாதங்களுக்கு பிறகு புழல் போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். 

Advertisment

இதனையடுத்து இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் போக்கு சரியில்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்து, மனமுடைந்த பிரதீப், தனது குழந்தைகள் லியா, சுபிக்க்ஷாவுடன் நேற்று முன்தினம் மாலை மாமல்லபுரம் வந்தார். அங்கு ஒத்தவாடை தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது அறையில் இருந்தவாரே பிரதீப் சென்னையில் உள்ள தனது உறவினருக்கு, மனைமுடைந்து அழுதுகொண்டே வீடியோ காலில் பேசி தான் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளபோவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். பிறகு தான் உடன் கொண்டு வந்த தின்னரை 2 குழந்தைகளுக்கு கொடுத்து கொன்றுள்ளார். பிறகு தானும் குடித்துள்ளார். 

Advertisment

அதன் பிறகு சென்னையில் உள்ள உறவினர்கள் மாமல்லபுரம் விரைந்து வந்தனர். அவா்கள் அவர் தங்கிய அறைக்கு போலீசாருடன் சென்று பார்த்தபோது தின்னர் கொடுக்கப்பட்ட 2 குழந்தைகள் லாட்ஜ் அறையில் கட்டிலில் இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த பிரதீப்பை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இனஸ்பெக்டர் பரசுராமன் மற்றும் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

tvl-2-child-issue-1

மனைவியின் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தால் தந்தையின் கையாலேயே 2 குழந்தைகள் தின்னர் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அறையில் கிடந்த தின்னர் பாட்டிலை போலீசார் கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment