சொத்து தகராறில் தனது மனைவியை கொலை செய்து அவரது உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி டிரம்மில் அடைத்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத்தை சேர்ந்தவர் அசுதோஷ். இவருக்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு லதா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சொத்து பிரச்சனை காரணமாக அசுதோஷுக்கும் லதா தேவிக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் தனது மனைவி லதா தேவியை கொலை செய்ய அசுதோஷ் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், அசுதோஷ் தனது 3 சகோதர்களின் உதவியுடன் தனது மனைவி லதா தேவியை கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி கொடூரமாக கொலை செய்து இரண்டு துண்டுகளாக வெட்டியுள்ளார். மேலும், லதா தேவியின் தலை பகுதியை ஒரு டிரம்மிற்குள்ளும், உடல் பகுதியை வீட்டில் உள்ள ஒரு கட்டிலிலும் மறைத்து வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தடயவியல் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்று மறைத்து வைத்திருந்த உடல் மற்றும் தலையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லதா தேவி சகோதரர் சஞ்சீவ் தீட்சித் கூறுகையில், ‘என் சகோதரியின் மாமியாரும் அவரது மகன்கள் 4 பேரும் என் சகோதரியை கொன்றனர். அவர்கள் அவளின் கழுத்தை நெரித்து அவளுடைய உடலை இரண்டு துண்டுகளாக வெட்டினார்கள். ஒரு பகுதி கட்டிலில் இருந்தது, மற்றொரு பகுதி அறைக்குள் ஒரு டிரம்மில் வைக்கப்பட்டது. திருமணத்திற்கு 26 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்கள் அவளை ஏன் கொன்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை’ என்று கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக அசுதோஷை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/15/up-2026-01-15-12-49-46.jpg)