Advertisment

காதலனை கைவிடாத மனைவி; 6 மாதத்தில் முடிவுக்கு வந்த திருமணம் - உயிரை மாய்த்துகொண்ட ராணுவ வீரர்!

1

கிருஷ்ணகிரி அடுத்த தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தும்பலப்பள்ளி கிராமம். இந்த பகுதியில் உள்ள பாறையின் மேல்.. கடந்த 18ம் தேதி காலை ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகவும், அருகில் பீர் பாட்டில், விஷ பாட்டில், விஷ மருந்து பாக்கெட்டுகள், செல்போன் ஆகியவை கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை கேட்டவுடன் உடனடியாக ஸ்பாட்டுக்கு சென்ற தாலுகா போலீசார்.. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, இறந்தவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்.. அவர் ஒரு ராணுவ வீரர் என்பதும் விடுமுறையில் ஊருக்கு வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து.. இந்த மர்ம மரணம் குறித்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அடுத்த திப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் முனியப்பன் – பார்வதி தம்பதி. இவர்களுடைய மகன் தனுஷ்குமார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் சிப்பாய் பிரிவில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
தனுஷ்குமாருக்கும் செம்படமுத்தூர் அடுத்த ஒம்பலகட்டு கிராமத்தை சேர்ந்த அனிதா என்பவருக்கும்.. கடந்த பிப்ரவரி 16ம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக ஒன்றரை மாதம் விடுமுறையில் வந்த தனுஷ்குமார்.. திருமணம் முடிந்து மீண்டும் ராணுவத்திற்கு சென்றுவிட்டார். புதுமண பெண்ணான அனிதா, திப்பனப்பள்ளியில் உள்ள தனுஷ்குமாரின் தாய் விட்டிலும், ஒம்பலகட்டு பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிலும்.. மாறி மாறி தங்கி இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் தனுஷ்குமார் தனது மனைவி அனிதாவிற்கு போன் செய்யும் போதெல்லாம் வெயிட்டிங்கில் கால் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி, வாட்ஸ் அப்பில் இரவு முழுவதும் அனிதா ஆன்லைனில் இருப்பது.. தனுஷ்குமாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையெடுத்து, தனுஷ்குமார் ஊரில் உள்ள தனது நண்பர்களிடம் தனது மனைவி குறித்து விசாரித்துள்ளார். அப்போது தான் அனிதாவிற்கும், அனிதாவின் அண்ணி கோமதியின் தம்பியான அன்பு என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது, அனிதாவின் அண்ணன் சத்தியபிரகாஷிற்கும்.. அன்புவின் அக்காவான கோமதிக்கும் சில ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு திருமண நடைபெற்ற சில நாட்களிலேயே அன்புவுடன் அனிதாவிற்கு காதல் மலர்ந்துள்ளது. ஆனால் மிலிட்டரி மாப்பிள்ளை என்ற ஒரே காரணத்திற்காக, எப்படியும் திருமணம் முடிந்து ராணுவத்திற்கு சென்றுவிடுவார், பணத்திற்கும் பிரச்சினை இருக்காது, இஷ்டப்படி அன்புவுடனே ஜாலியாக வாழலாம் என அனிதா பக்காவாக பிளான் போட்டு இருக்கிறார். அதற்கு ஏற்றார் போல்.. அன்பு உடனான காதலை மறைத்த அனிதா, தனுஷ்குமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இதையெல்லாம் தெரிந்துகொண்ட தனுஷ்குமார், திருமணம் முடிந்து முதல் முறையாக கடந்த ஆகஸ்டு மாதம் ஊருக்கு வந்துள்ளார். தனுஷ்குமார் நேரில் வந்த பின்பும் அவருடன் சரியாக பேசாமல், செல்போனில் சாட் செய்வதிலேயே அனிதா குறியாக இருந்துள்ளார். இதற்கிடையில், தனுஷ்குமார் அனிதா இல்லாத போது அவரது செல்பொனை செக் செய்ததில் இந்த  திருமணத்தை மீறிய உறவு அம்பலப்பட்டுள்ளது, இந்த விவகாரம் அனிதாவின் பெற்றோருக்கு தெரிந்தும்.. அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. 

Advertisment

இதனால் மனமுடைந்த தனுஷ்குமார், மதுவுக்கு அடிமையாகி தினமும் மது அருந்தி விட்டு நாட்களை கடந்துள்ளார். விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு செல்வதற்காக 2 முறை பெங்களூர் ஏர்போர்ட்டிற்கு சென்ற தனுஷ்குமார். ராணுவத்திற்கு செல்லாமல் மீண்டும் வீட்டிற்கே வந்துள்ளார். மேலும் உள்ளூரிலேயே வேலை ஏதாவது கிடைக்குமா எனவும் தனது நண்பர்களிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அனிதா, அன்புவிடம் மெசேஜ் செய்வதையும், பழகுவதையும் நிறுத்தவில்லை. இதனால் மேலும் மனமுடைந்த தனுஷ்குமார், கடந்த 17ம் தேதி மதியம் 2 மணியளவில், தனக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனைக்கு செல்கிறேன் எனக்கூறிவிட்டு.. நேராக டாஸ்மாக் கடைக்கு சென்றிருக்கிறார். அங்கு பீர் பாட்டில்களை வாங்கி கொண்டு தும்பலப்பள்ளி பகுதிக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். பின்னர் தனது செல்போனில் இருந்து  மனைவி அனிதாவிற்கும், தாய் பார்வதிக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்துள்ளார். அந்த வாய்ஸ் மெசேஜில்:- அனிதா நீ அன்புக்கு மெசேஜ் செய்றது, போன் பண்ணி பேசுறது எல்லாம் எனக்கு தெரியும். நான் என்ன பண்றது, பாத்துட்டு பாக்காத மாதிரி தான் இருக்கனும், என்னால ஒன்னும் பண்ண முடியல, சரி நீ உன் லைப்ப பாத்துக்கோ.. என்னால ஏன் கஷ்ட்பட்டுட்டு இருக்க, நீ இப்படியெல்லாம் பண்ணுவன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. கல்யாணம் ஆன அப்புறம் இப்படியெல்லாம் பண்ணா ஒரு மனுஷனுக்கு எவ்ளோ கஷ்டம் இருக்கும் தெரியுமா.. நான் மேல போறேன், நீ பத்திரமா இரு என அனிதா செய்த நம்பிக்கை துரோகத்தால் மிகுந்த சோகத்துடன் கடைசியாக பேசியிருக்கிறார்.

அதன்பிறகு, தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷமருந்துகளை பீர் பாட்டிலில் ஊற்றி குடித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாலுகா போலீசார்.. அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர், தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததை அறிந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையை ஏற்படுத்தி உள்ளது.

Husband and wife army man marriage Krishnagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe