கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைகோட்டாலம் கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பனின் மகன் கொளஞ்சி. இவர் தனது இரண்டாவது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வந்த நிலையில், கொளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, தலையின்றி கிடப்பதாக வரஞ்சரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

Advertisment

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கொளஞ்சியின் இரண்டாவது மனைவி லட்சுமி என்பது தெரியவந்தது. அருகே இருந்த ஆண் சடலம் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த செல்போனை மீட்டு விசாரித்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் செல்போன் என்பது தெரியவந்தது.

தங்கராசு யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. தங்கவேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், கொலை செய்துவிட்டு, தலையுடன் சென்றவர் லட்சுமியின் கணவர் கொளஞ்சியாக இருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வேலூர் மத்திய சிறைக்கு ஒருவர், ஒரு கையில் பையுடன் வந்தார். அங்கிருந்த பாதுகாப்பு காவலர்களிடம், "நான் கொலை செய்துவிட்டேன், என்னை சிறையில் அடைக்கவும்" என்று கூறியவர், இரண்டு தலைகளைக் காட்டியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறைத் துறையினர், அவரை வேலூர் பாகாயம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

பாகாயம் காவல்துறையினர், வேலூர் மத்திய சிறையிலிருந்து அவரை அழைத்துச் சென்று, பாகாயம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மனைவி மொட்டை மாடியில் இரவில் ஆண் நண்பரோடு இருப்பதை நேரில் பார்த்ததால் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு. இருவரின் தலையையும் பையில் போட்டுக்கொண்டு பேருந்தில் ஏறி கள்ளக்குறிச்சியில் இருந்து வேலூர் வரை வந்து வேலூர் மத்திய சிறைக்குள் நுழைந்து இரண்டு தலையைக் காட்டி நான் கொலை செய்து விட்டேன் என்னை சிறையில் அடையுங்கள்” எனக் கூறினேன் என்றார்.

இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மற்றும் வேலூர் மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.