கடன் தகராறில் மனைவியின் மூக்கை கணவன் கடித்து துப்பிய சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தாவனகிரேவில் வசித்து வருபவர் விஜய். இவருடைய மனைவி வித்யா. சில நாட்களுக்கு முன்பு வித்யா ஒரு சிலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கணவர் விஜய் ஜாமீன் கையெழுத்து போட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வித்யா தான் வாங்கிய கடன் தொகையை கட்டாததால் கடன் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து சண்டை போட்டுள்ளனர்.மேலும் ஜாமீன் கையெழுத்துப் போட்ட கணவன் விஜய்யிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதன் காரணமாக கணவன் விஜய்க்கும் மனைவி வித்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடன் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் சம்பவத்தன்று கணவர் விஜய் மனைவி வித்யாவின் மூக்கை கடிதத்து துப்பியதாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட வித்யா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கணவன் விஜய்யை தேடி வருகின்றனர்.