ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி பகுதியில் உள்ள பெடவட்லபுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் அகமது (27) . இவர் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கிராந்தி (25) என்ற பெண்ணுக்கும் ஷேக் அகமதுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கிராந்திக்கு திருமணமாகி அவரது கணவர் வழக்கு சம்பந்தமாகச் சிறையில் உள்ளார். இந்த நிலையில், கிராந்திக்கும் அகமதுவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்பு அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குத் திருமணமாகிக் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகின்றன. இவர்களுக்குள் திருமணம் ஆன காலம் முதலே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், ரம்ஜான் மாதத்தில் விரதம் இருந்து வந்த அகமது, மதியம் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி கிராந்தி, அதிக சத்தத்துடன் டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அகமது டி.வி சத்தத்தை குறைக்குமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஆத்திரமடைந்த கிராந்தி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அகமதுவைக் குத்தியுள்ளார்.
இதையடுத்து, படுகாயமடைந்த அகமதுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சினகக்கானியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஷேக் அமகதுவின் தாயார் மஹாபி அளித்த புகாரின் அடிப்படையில் மங்களகிரி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, போலீசார் கிராந்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/20/tv-2026-02-20-19-54-04.jpg)