‘மதம் மாறு, இல்லையென்றால் பாலியல் வன்கொடுமை வழக்கு போடுவேன்...’ - கணவனுக்கு மிரட்டல் விடுத்த மனைவி!

musl

husband accuse his muslim Wife threatens Convert religion, or will file a assault case in karnataka

தனது மனைவி இஸ்லாம் மதத்துக்கு மாறுமாறு வற்புறுத்தியதாகவும், இல்லையென்றால் பாலியல் வன்கொடுமை வழக்கு போடுவதாக மிரட்டுவதாகவும் இந்து நபர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது கர்நாடகாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நடகா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் கோகவி, தெஸ்சின் ஹோசமனி என்ற முஸ்லிம் பெண்ணை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அதன் பின்னர், சிறப்பு திருமணச் சட்டத்தின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். தெஹ்சின் ஹோசமனி பெற்றோர் வற்புறுத்தலின் படி, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இஸ்லாம் மத முறைப்படி இருவருக்கும் மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தின் போது வற்புறுத்தலின் பேரில் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், மதம் மாறவில்லை என்றால் பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடருவதாகவும் தெஸ்சினும் அவரது குடும்பத்தினரும் பலமுறை மிரட்டுவதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக விஷால் கூறியதாவது, ‘நான் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து வந்தேன். நாங்கள் மூன்று வருடங்களாக உறவில் இருந்தோம். இறுதியில், அவளுடைய குடும்பத்தினர் எங்கள் உறவைப் பற்றி அறிந்து கொண்டனர். அவள் என்னிடம், நீ எப்போதாவது திருமணம் செய்து கொண்டால், அது என்னுடன் தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், நான் ரயில் முன் குதித்து, விஷம் குடித்து, அல்லது தரையில் உருண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னாள். அவள் என்னை மிரட்டிக் கொண்டே இருந்தாள். நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவள் வற்புறுத்தினாள். பயத்தின் காரணமாக, நான் சம்மதித்தேன், எங்கள் திருமணத்தை பதிவு செய்தோம். பின்னர், அவளுடைய மாமா இப்ராஹிம் சாப் தவால் கானும் அவளுடைய தாயார் பேகம் பானுவும் என்னை அவர்களின் மதத்திற்கு மாற்றி ஜமாத்தில் சேரச் சொன்னார்கள்.

மேலும், நான் அவளை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெஹ்சின் சொன்னாள். நான் மறுத்ததால், பிரச்சனை அதிகமாகிவிட்டது. ஜமாத் உறுப்பினர்கள் எனக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ஜமாத்தில் கலந்துகொண்டு எங்கள் பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் என்னை வற்புறுத்தினர். மதம் மாறவில்லை என் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு போடுவதாக எல்லோரும் மிரட்டினார்கள். நான் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன். தினமும் நான் தொழுகை செய்கிறேனா? இல்லையா என்பதை அவளுடைய மாமா தொடர்ந்து கண்காணித்து வந்தார். தொழுகை செய்யும்போது போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்தினார்’ என்று கூறினார்.

விஷாலின் இந்த குற்றச்சாட்டு மற்றும் அவர்களது திருமணத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் அங்கு உள்ள பல இந்து அமைப்புகள் இந்த சம்பவத்தை ‘லவ் ஜிகாத்’ வழக்கு என்று கூறி தெஹ்சின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து விஷாலை காவல் நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும், புகார் அளித்தால் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவோம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Husband and wife karnataka marriage muslims convert
இதையும் படியுங்கள்
Subscribe