Advertisment

'எத்தனை பேர் வருவார்கள்...'-செங்கோட்டையன் கணிப்பு

a5828

'How many people will come...' - Sengottaiyan's prediction Photograph: (tvk)

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் வருகிற 16 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளத்  திட்டமிட்டிருந்தார். அதனால், இந்த பரப்புரைக்கு அனுமதி கோரி அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் மனு கடந்த 7ஆம் தேதி அளித்திருந்தார்.

Advertisment

இதனிடையே, காவல்துறை சார்பில் 84 விதிகள் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை பூர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறி 16ஆம் தேதி நடத்த வேண்டிய பரப்புரை, 18ஆம் தேதியன்று நடத்த காவல்துறையிடம் செங்கோட்டையன் அனுமதி கேட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா நேற்று (14-12-25) நேரில் ஆய்வு செய்தார். விஜய் பேசும் இடம், தொண்டர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களை இன்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வைத் தொடர்ந்து விஜய்யின் மக்கள் சந்திப்புக்கு மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதி வழங்கியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவளத்தான்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் பேசுகையில், ''நாளை மறுதினத்திற்குள் காவல்துறை கொடுத்த நிபந்தனைகளை நிறைவேற்றும் பணிகள் நடைபெறும். போலீசார் கொடுத்துள்ள விதிமுறைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். பத்தாயிரம் பேர் கழகத் தொண்டர்கள், 25 ஆயிரம் பொதுமக்கள் வருவார்கள் என காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறோம்'' என தெரிவித்தார்.

Erode K. A. Sengottaiyan police tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe