'How can we get in...' Auto drivers attack taxi driver Photograph: (erode)
ஈரோட்டில் கால் டாக்ஸி ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்பொழுது பைக் மற்றும் கால் டாக்ஸி சேவையை மொபைல் செயலிகள் மூலம் செய்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சேலம் பேருந்து நிலையத்தில் பைக் டாக்ஸி புக் செய்த நபரையும் பைக் ஓட்டி வந்த நபரையும் ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் ஈரோட்டிலும் நிகழ்ந்துள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் கால் டாக்சி ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்துள்ளது. அப்பொழுது பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தனியார் கால் டாக்சி ஓட்டுநர் வாடிக்கையாளர் ஏற்றுவதை பார்த்துவிட்டு ஆவேசமாக கேள்வி எழுப்பினர். பேருந்து நிலையத்திற்குள் வந்து வாடகையாற்றக்கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கால் டாக்ஸி ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us