Advertisment

“தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?” - முதல்வருக்கு இ.பி.எஸ். கேள்வி!

eps1

தன் கட்சிக்கரர்களை ஒடுக்க முடியாத இந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்? என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisment

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ‘காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி’ எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்?

Advertisment

அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் சார்களைக் (SIR) கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். தன் கட்சிக்கரர்களை ஒடுக்க முடியாத இந்த முதல்வர், தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?. உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என  திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

dmk admk edappadi k palaniswami law and order mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe