திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளாது.

Advertisment

வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவர் அரசு தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டை இடித்து சீரமைப்பதற்கான பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது முனியனின் உறவினர் மகன்கள் அபினேஷ் மற்றும் முகேஷ் ஆகியோர் வீட்டின் அருகே இருந்துள்ளனர்.

Advertisment

அப்போது வீடு சீரமைப்பு பணியின்போது எதிர்பாராதவிதமாக இடிபாடுகளில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இறந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 10 வயது சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுடன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.