Advertisment

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்புகள்!

rain-holiday

வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. 

Advertisment

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (03.12.2025) விடுமுறை  தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி கனமழை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (03.12.2025) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில்  உள்ள அரக்கோணம் மற்றும் நெமிலி ஆகிய இரு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (03.12.2025) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களுக்கு எவ்விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த மாவட்டங்களில் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

students colleges schools holiday Indian Meteorological Department weather rain heavy rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe