Hockey game clash- Attack on school students Photograph: (dindigul)
திண்டுக்கல்லில் தனியார்ப் பள்ளியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியின் பொழுது பள்ளி மாணவர்களை கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடை பெற்று வந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 பள்ளிகள் கலந்துகொண்டது. இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. முத்தழகுபட்டியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் என்ற தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கும், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. அப்பொழுது கோல் கீப்பர் மீது தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லைத் தூக்கி தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.