திண்டுக்கல்லில் தனியார்ப் பள்ளியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியின் பொழுது பள்ளி மாணவர்களை கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடை பெற்று வந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 பள்ளிகள் கலந்துகொண்டது. இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. முத்தழகுபட்டியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் என்ற தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கும், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. அப்பொழுது கோல் கீப்பர் மீது தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லைத் தூக்கி தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர்களை கல்லூரி மாணவர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் மாணவி ஒருவர் மற்றும் இரண்டு பள்ளி மாணவர்கள் காயமடைந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.