தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநரும், வரலாற்று ஆய்வாளருமான நடன காசிநாதன் முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்தள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'பெரியவர் நடன காசிநாதன் ஏராளமான பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.  தமது ஆராய்ச்சிகளின் மூலம் ஏராளமான தகவல்களை வெளிக் கொண்டு வந்தவர்.  தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையத்தை நிறுவியவர். வன்னியர், சோழ வேந்தர் பரம்பரை வன்னியப் பாளையக்காரர் வரலாறு, மண்ணும் மாந்தரும் உள்ளிட்ட  பத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நூல்களை எழுதியவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும்  வெளியிட்டிருக்கிறார். தொல்லியல், காசு இயல் உள்ளிட்ட துறைகளில் ஆழமாக முத்திரை பதித்தவர். அண்மையில் கூட மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அவரது மறைவை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

Advertisment

நடன காசிநாதன் அவர்களை  இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தொல்லியல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.