Advertisment

மத அரசியலைத் தூண்டி ஆதாயம் தேடும் இந்துத்துவ சக்திகள் - திமுக ஐ. டி.விங்க் அட்டாக்!

Arivalayam

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தேசிய அளவில் வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இது குறித்து திமுக ஐ.டி.விங்க் அதிரடி காட்டியிருக்கிறது. அதில்,  "மத மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் இந்துத்துவ சக்திகள் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகைத் தீபத்தை ஒட்டி மசூதி அருகேதான் தீபம் ஏற்ற வேண்டும் என துடிக்கிறார்கள்.

Advertisment

ஆனால் உண்மை என்ன? வரலாறு சொல்வது என்ன?

ஆண்டு ஆண்டாண்டு காலமாகவே கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றுவதுதான் ஆகம மரபு. அதன்படியேதான் இந்தாண்டும் (3.12.2025 அன்று) தீபத்தினை ஏற்றியுள்ளது கோயில் நிர்வாகம். இதற்கு நேர் கோட்டில் தான் திருப்பரங்குன்றம் கோயிலின் கர்ப்பகிரகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இதுபோல் வேறெங்கும் இல்லை என்பதுதான் இதன் சிறப்பே. கல்வெட்டாய்வாளர் செ.போசு அவர்கள் எழுதிய திருப்பரங்குன்றம் ஆய்வு நூலில், “மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச்சென்றால் பாதி வழியில் 'தீபத்தூண்' ஒன்று இருப்பதைக் காணலாம். இந்தத் தூண் நாயக்கர் காலத்தது. இத்தீபத்தூணில் கார்த்திகை தோறும் ஊரிலுள்ள மக்கள் விளக்கேற்றி வருகிறார்கள்.என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல நூற்றாண்டுகளாகவே இங்கேதான் தீபம் ஏற்றப்படுவது உறுதியாகிறது.

Advertisment

மேலும், 2014ஆம் ஆண்டே நீதியரசர்கள் பவானி சுப்பராயன், நீதியரசர் கல்யாணசுந்தரம் ஆகியோர் இன்று எந்த இடத்தில் கார்த்திகை தீபத்தை வழக்கப்படி ஏற்றிக் கொண்டிருக்கிறோமோ அதே இடத்தில் தான் ஏற்ற வேண்டும்என்று தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.அந்த தீர்ப்பின் படியும், நூற்றாண்டு கால மரபின் படியும், மக்களின் நம்பிக்கை படியும் கார்த்திகைத் தீபத்தை ஏற்றியுள்ளது கோயில் நிர்வாகம். இதனை மக்களும் அறிவர்.

ஆனால், புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை சனாதனவாதிகள் சொல்வார்களா? அதற்கு வரலாற்று ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா? . இவர்களின் போலி ஆன்மீக பக்தியை தமிழ்நாடு என்றும் ஏற்காது! மக்கள் எப்போதோ விழித்துக்கொண்டார்கள்!" என்று தெரிவித்துள்ளது.

dmk Thiruparankundram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe