"Hindu is not a religion" - BJP opposes Karunas' speech Photograph: (karunas)
பிரபல நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் அவர்கள் பேசிய கருத்துக்கள் தற்போது வைரலாகிறது வருகிறது. குறிப்பாக, இது குறித்து பாஜக மற்றும் சில மதம் சார்ந்த அமைப்புகள் அவரது பேச்சுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன் கருணாஸ் பேசிய கருத்துக்கள் இன்றளவும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
அந்த வகையில், அவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசியதாவது, " இந்து என்ற சொல் ஒரு மதத்தைக் குறிப்பது அல்ல. அது பாரசீகர்களால் சிந்து நதி நாகரிகத்தில் வாழ்ந்த மக்களைக் குறிக்கும் ஒரு புவியியல் சார்ந்த சொல் ஆகும். பண்டைய காலத்தில், இந்த மண்ணில் சைவம், வைணவம், கௌமாரம், சமணம் மற்றும் சாக்தம் உள்ளிட்ட மதங்கள் இருந்தன. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னால், இது அவர்களின் நிர்வாக வசதிக்கு ஏற்ப கிறித்தவம், இசுலாம் மதங்கள் தவிர்த்து மீதமுள்ள பிற மதங்களை இந்து என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டது" என்று கூறியிருந்தார்.
குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தங்களுக்கென தனிப்பட்ட கலாச்சாரம் மற்றும் வழிப்பாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக இந்து என்ற அமைப்பிற்குள் அடைப்பது அவர்களது அடையாளத்தைச் சிதைக்கும் செயல்" என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், "நான் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதனால், நான் உறுதியாகச் சொல்கிறேன். இந்து என்பது ஒரு மதமே அல்ல" என்று கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, இந்து முன்னணி மற்றும் சில மதவாத அமைப்பினர், கருணாஸ் இந்து மாத்திற்கு எதிராகப் பேசியுள்ளதாக கூறி தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், சில சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், பாஜக உள்ளிட்ட சில காட்சிகளைச் சேர்ந்தவர்கள் கருணாஸ் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தி வருவதாகவும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
Follow Us