திண்டுக்கல்லில் அனுமதியின்றி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் அனைத்து இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் அனுமதி இல்லாமல் இந்து முன்னணி அமைப்பினர் காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைத்து, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற நிலையில் காவல்துறையினர் விநாயகர் சிலையை பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள குடைபாறைப்பட்டி பேகம்பூர் அருகே அமைந்துள்ளது. அந்த பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இடமாக கருதப்படுகிறது. இதனால் அமைப்புகள் சார்பாகவும், கட்சி சார்பாகவும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் தடையை மீறி இந்து முன்னணியினர் குடைபாறைப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து அதை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்ற நிலையில் போலீசார் சிலையை பறிமுதல் செய்தனர். தடையை மீறி செயல்பட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை போலீசாரே குளத்தில் கரைத்தனர்.