தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெக்கப்படும் பழங்கால பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுவது வழக்கம். இவ்வாறாக ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற இடங்களில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்த பழங்கால பொருட்கள், நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த அருங்காட்சியகத்தை வருகின்ற ஞாயிற்றுகிழமை (21-12-25)  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கும் நிலையில் சில மர்ம நபர்கள் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டம், பொருநை அருங்காட்சியக பாறையில் மர்ம நபர்கள், ‘ராம்’ என இந்தியில் எழுதிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்த பாறையானது அருங்காட்சியகத்தின் புல்வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாறையில் அடையாளம் தெரியாத மரம நபர்கள் "ராம்" என இந்தியில் எழுதியிருந்தது அதிகாரிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

பின்பு, இந்தியில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள் அழிக்கப்பட்டு, இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் திறந்துவைக்கவுள்ள அருங்காட்சியக கட்டிட வளாகத்தில் இவ்வாறாக மர்ம நபர்கள் செய்துள்ள இந்த செயல் பொது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.