மும்மொழிக் கொள்கைக்கு இன்று வரை தமிழ்நாடு அரசும் தமிழர்களும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்தி போன்ற மற்ற மொழிகளை மக்கள் விரும்பினால் படிக்கட்டும் ஆனால் திணிக்க கூடாது என்பதை தொடர்ந்து வலியுத்தி வருகின்றனர். மற்றொரு பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தி உள்ளே நுழைந்து கொண்டுள்ளது. 

Advertisment

pdu-name-board1

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் ஊர் பெயர்களை தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதியுள்ளனர். இதனை அறிந்த இந்த எதிர்பாளர்கள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த எழுத்துகளை கருப்பு பெயிண்ட் பூசி அழித்துள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழ், இந்தி எழுத்துகளில் மட்டுமே ஊர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.