Advertisment

பா.ஜ.க மாநிலத் தலைவரின் சகோதரர் மீது பாலியல் புகார்; சிகிச்சை அளிப்பதாகக் கூறி அத்துமீறிய கொடூரம்!

himachalbjp

Himachal pradesh BJP state president's brother arrested complaint against misbehaviour to woman

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஹிமாச்சலப் பிரதேச பா.ஜ.க மாநிலத் தலைவரின் சகோதரர் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பா.ஜ.க மாநிலத் தலைவராக ராஜீவ் பிந்தல் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மூத்த சகோதரர் ராம்குமார் பிந்தல் (80), ஆயுர்வேத மருத்துவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், சிகிச்சை அளிப்பதாகக் கூறி ராம்குமார் பிந்தல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisment

நீண்ட காலமாக ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அந்த பெண்ணுக்கு அறிவியல் ரீதியாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் போயுள்ளது. இதனால், ராம்குமார் பிந்தலை அணுக அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி அந்த பெண், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி சோலன் பேருந்து நிலையம் அருகே உள்ள ராம்குமாரின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது ராம்குமார், அந்த பெண்ணின் கைகளை தொட்டு அவரது பாலியல் பிரச்சனைகளை குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் நடந்த பரிசோதனையின் போது, ராம்குமார் அந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ராம்குமார் பிந்தல் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் பிண்டல், “இந்த வழக்கு அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டது. சதித்திட்டத்தின் ஒரு பகுதி. எனது சகோதர் மாநிலத்தில் மிகவும் மதிக்ப்படும் ஆயுர்வேத மருத்துவர். அவருக்கு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர், ஐ.பி.எஸ் அதிகாரியாக உள்ளார். குற்றச்சாட்டுகள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் தொந்தரவாக உள்ளன. காவல்துறை அவசரமாகச் செயல்பட்டது. சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது எனக்குப் புரியவில்லை” என்று கூறினார். பா.ஜ.க மாநிலத் தலைவரின் மூத்த சகோதரர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளது.

woman harrasment woman bjp president Himachal Pradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe