Advertisment

துணைவேந்தர்கள் நியமன மசோதா; ஆளுநருக்கு பின்னடைவாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

supremecourt

High Court's stay on Tamil Nadu government's law lifted on Appointment of Vice-Chancellors

பல்கலைக்கழகங்களுக்குத் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் சட்டப்படி ஆளுநருக்குத் தான் உள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கே வழங்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் (மசோதா இயற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இந்த வழக்கு, நீதிபதிகள், ஜி.ஆர்.சாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, நீதிபதிகள் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட (துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Advertisment

இந்த வழக்கு, இன்று (04-02-26) நீதிபதிகள் சூர்யகாந்த், ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கும் சட்டத்துக்கு எதிரான உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள், “துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கும் சட்டத்துக்கு தடையில்லை. இந்த வழக்கில், மாநில அரசின் வாதங்களை முன் வைக்க போதிய கால அவகாசம் கொடுக்கப்படாத காரணத்தினாலே இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முழுமையான விசாரணை நடைபெறாத காரணத்தினால், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே அனுப்புகிறோம். தமிழக அரசு தரப்புக்குப் பதில் அளிக்க போதிய கால அவகாசம் கொடுத்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்த வேண்டும்.

துணைவேந்தர்கள் நியமனச் சட்டத்திற்கு எதிரான வழக்கை 6 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். இதற்கான உரிய அமர்வை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்க வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை புதிய நியமனங்கள் செய்யமாட்டோம் என்ற தமிழ்நாடு அரசின் உறுதிமொழியையும் பதிவு செய்கிறோம். உயர் நீதிமன்ற அமர்வு இவ்வழக்கில் கூறிய கருத்துக்களையும் ரத்து செய்கிறோம்” என உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை துணைவேந்தர்களை நியமிக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. 

Supreme Court vice chancellor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe