Advertisment

“தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும்” - உயர்நீதிமன்றம் உத்தரவு!

judgement

சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த சரத்​கு​மார், வெங்​கடேஷ் மற்றும் சவுத்ரி ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு ஒன்றைத் தாக்​கல் செய்​திருந்தனர். அந்த மனுவில், “புதிதாக உரு​வாக்​கப்​பட்ட தாம்​பரம் மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​துக்​காக, சோழிங்​கநல்​லூரில் எங்​களுக்கு சொந்தமான 4 மாடி கட்​டடத்தை குத்​தகை அடிப்​படை​யில் வாடகைக்கு வழங்​கியிருந்​தோம். அதற்கு மாதம் 10 லட்​சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்​ண​யம் செய்​திருந்​தோம். 

Advertisment

அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்​திடப்​பட்​டது. இருப்பினும் நாங்கள் மேற்கொண்ட ஒப்​பந்​தப்​படி வாடகை வழங்காமல் பொதுப்​பணித்துறை​யின் வழிகாட்டி மதிப்​பீட்​டின்​படி மாதம் 6 லட்​சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் என நிர்​ண​யம் செய்து வாடகை வழங்​கப்​படு​கிறது. இதன் காரண​மாக குத்​தகைக் காலத்தை நாங்​கள் நீட்​டிக்​க நாங்கள் விரும்ப​வில்​லை. அதோடு எங்​களது அனுமதியின்றி பல்வேறு கட்​டு​மானப் பணி​களை தற்போது மேற்​கொண்டு வருகின்றனர். எனவே எங்​களது கட்டடத்தை காலி செய்து எங்​களிடம் ஒப்​படைக்க உத்​தர​விட வேண்டும்” எனத் தெரிவித்திருந்​தனர். 

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி இன்று (11.08.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டடத்திற்கான வாடகையை ரூ. 6 லட்சத்தில் இருந்து 13 லட்சமாக உயர்த்தியும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு கூடுதல் தொகை ரூ. 2.18 கோடியை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் (31.12.2025) மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Municipal Commissioner judgement high court tambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe