கோப்புப்படம்
அமலாக்கத்துறை சார்பில் தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், தமிழக நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம், டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி கூறி அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த கடிதத்தின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் இது தொடர்பாக அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிநாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அதில், “அமலாக்கத்துறை சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அதே சமயம் வழக்கு தொடர்ந்த ஆதிநாராயணன் மீது பல்வேறு வழக்குகள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழக அரசு தரப்பில் அவரது மனு மீதான நீதி விசாரணைக்குப் பதிலாக அவர் மீது குற்றம் சாட்டி பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் இந்த கடிதம் குறித்த ஆரம்பக் கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். மற்றொருபுறம் டி.ஜி.பி.க்கு அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தை, 2 மாதத்திற்கு பிறகுதான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று (20.02.2026) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்த வழக்கில் அமைச்சர் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/20/judgement-2026-02-20-11-55-34.jpg)
அமலாக்கத்துறை அளித்த கடிதத்தின் அடிப்படையில் டி.ஜி.பி. அனுப்பிய புகார் கடிதம் குறித்து விசாரணை நடத்துவதற்குக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும். ஆதிநாராயணன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை உடனடியாக பதிவு செய்து துறை ரீதியாக நடைபெற்ற முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.
Follow Us