சென்னை பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்திற்குள், ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத் திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் திட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கிடையே பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கியது சட்ட விரோதம்” என அறிவிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று (31.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “சதுப்புநிலத்தின் எல்லையைத் துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வு 2 வாரங்களில் முடிவடையும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், “பள்ளிக்கணை சதுப்புநில பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. இந்த மனுவிற்கு, தமிழ்நாடு அரசு வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டன. அதில், “ராம்சர் தலம் அமையும் நிலங்கள் இன்னும் புல எண்களுடன் குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்படாததால், தற்போதைய பள்ளிக்கரணை சதுப்புநில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us/nakkheeran/media/media_files/2025/10/31/hc-2025-10-31-14-39-24.jpg)