தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்கள் 31.37 ஏக்கர் அளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த புறம்போக்கு நிலத்தை தங்களுக்கே ஒதுக்கும்படி கேட்டு அரசுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதோடு ஆக்கிரமிப்பு நிலத்திற்கு உண்டான வித்தியாச தொகையையும், தற்போது உள்ள விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக அரசிடம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தமிழக அரசோ, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துப் பயன்படுத்திய காரணத்தினால் அதனை நிராகரித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அதில் புறம்போக்கு நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதற்கான உத்தரவைப் பிறப்பித்து தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீசும் அனுப்பி இருந்தார். இதனை எதிர்த்துத் தான் சாஸ்திரா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (09.01.2026) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பிலும், சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் தரப்பிலும் வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். அந்த வகையில் அரசு தரப்பில் வாதிடுகையில், “அங்குள்ள நிலங்கள் அனைத்தையுமே சாஸ்திரா பல்கலைக்கழகத்தினர் ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வருகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கர் அரசு நிலத்தையும் மீட்க வேண்டும். இந்த நடவடிக்கையை காவல்துறை உதவியுடன் 4 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும்” உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/hc-2026-01-09-18-34-18.jpg)