மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் வழக்கை சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையிலான ஒரு புத்தகம், நாளை (07.01.2026) நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கவுள்ள சென்னை 49வது புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் புத்தகம் நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இந்தப் புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப் போல ஆகிவிடும்.
எனவே இந்தப் புத்தக விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, இன்று காலை தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொறுப்பிலுள்ள நீதிபதியை எப்படி விமசிக்க முடியும் என்று கூறி, அந்தப் புத்தகத்தை விற்பனை செய்யக் கூடாது என்றும், அந்தப் புத்தகங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், புத்தகத்தை பதிப்பித்த பதிப்பகம் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க பதிப்பகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு, புத்தகத்தை எழுதிய நூலாசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், புத்தகம் விற்பனைக்கு வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/judgement-gr-swaminathan-2026-01-07-23-46-19.jpg)