கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் ஐடி ஊழியர் ஒருவரைக் கடத்தித் தாக்கியதாகப் புகார் கொடுக்கப்பட்டது. காரை வழிமறித்து தாக்குதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் பிரபல நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியில் நடிகை லட்சுமி மேனனும் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் விசாரணைக்காக நடிகை லட்சுமி மேனனையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த னர். இதனையறிந்த லட்சுமி மேனன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாக இருப்பததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் காவல்துறை சார்பில் தகவல் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில் தான் முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் லட்சுமேனன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.