Advertisment

பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா; வட மாநில பெண் கைது!

hsra-tata-company-hostel-issue

பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடுதியின் குளியல் அறையில் கேமரா வைத்ததாக வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர். அந்த வகையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் தொழிற்சாலை ஒன்றின் சார்பில் இயங்கி வரும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா இருந்துள்ளது. இதனை அங்குள்ள பெண்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், குளியல் அறையில் கேமரா வைக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று (04.11.2025) இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. 

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பெண்கள் தங்கும் விடுதியின் குளியல் அறையில் கேமராவை வைத்த வட மாநிலத்தைச் சேர்ந்த நீலாமாரி குப்தா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் ஏன் குளியல் அறையில் கேமரா வைத்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

arrested hidden camera Hosur Krishnagiri police TATA Group Women
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe