Advertisment

“இறையருள் பெற ஏழைகளுக்கு உதவுங்கள்!”  -ராஜேந்திரபாலாஜி டச்சிங்!

92

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனது  பிறந்த நாளை  ஆதரவற்ற முதியவர்கள்,  காது மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகளுடன்  நலத்திட்ட உதவிகள் மற்றும்  அன்னதானம் வழங்கிக் கொண்டாடினார்.  

Advertisment

சிவகாசி – சாட்சியாபுரத்தில் உள்ள ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர்  மற்றும் வாய் பேசாதோர், செவித்திறன் குன்றிய மாணவ, மாணவியருக்கு புத்தாடைகளும், அறுசுவை உணவும் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

Advertisment

103

“ஏழைகளுக்குச் செய்கின்ற உதவியே இறைவனுக்கான வழிபாடாகும்.  கஷ்டப்படக்கூடியவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு நீங்கள் உதவி  செய்தால், இறைவனின் அருள் உங்களுக்குக் கிடைக்கும். அனைத்து  மதங்களிலும் கூறப்படுவது இதுதான். வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு  அறுசுவை உணவு வழங்கினால், அதன் சுவை அவர்களுக்குத் தெரியாது.  அந்த உணவின் அருமையும் புரியாது. அதேநேரத்தில், பசியில்  இருப்பவர்களுக்கு அந்த உணவைக் கொடுத்தால், அந்த உணவுக்கே  மரியாதை. அதை வழங்குபவர்களுக்கும் மரியாதை. எம்.ஜி.ஆர். தொடங்கி,  அதிமுக தலைவர்கள் பலரும் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதை ஒரு   கொள்கையாகவே கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள்; வாழ்கின்றனவர்கள்.  அவர்களது வழியிலேயே நானும் உதவி செய்து வருகிறேன்.” என்றார்.

பேரறிஞர் அண்ணா பறைசாற்றியதும்கூட  ‘ஏழையின் சிரிப்பில்  இறைவனைக் காண்போம்!’ என்னும் கருத்தியலைத்தான்.   

people admk kt rajendra balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe