தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை க்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை,சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் பல இடங்களில் அதிகாலை நேரத்தில் கனமழை பொழிந்தது. அதிகபட்சமாக மணலி புதுநகரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள.து அதேபோல சென்னை கத்திவாக்கம், சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஆகிய இடங்களில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.