Heavy rain warning - school holiday announcement issued Photograph: (rain)
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் கடும் பனி சூழல் நிலவி வருகிறது.
நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சாரல் மழை பொழிந்து இருந்தது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களில் சாரல் மழை பொழிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர்ந்து தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us