தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான வள்ளியூர், பணங்குடி, திசையன்விளை மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

Advertisment

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று (15.10.2025) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. 

Advertisment

முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (16.10.2025) மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனமழை காரணமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சுகுமார் பிறப்பித்துள்ளார். 

மேலும் கனமழை காரணமாகத் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (16.10.2020) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி என 3 மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment