தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அருவியில் குளிக்கச் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (26/09/2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.