இன்று (08/09/2025) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவித்துள்ளது.
அதேபோல் செப்டம்பர் 9 ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்று காலை 10 மணி வரை செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.