தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (01.03.2026) தனது 73வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,, “திராவிட மாடலின் நாயகர்களான தந்தை பெரியார் விதைத்த சமூகநீதி சிந்தனையையும், பேரறிஞர் அண்ணா வடிவமைத்த அரசியல் மரபையும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய திராவிடச் சித்தாந்தத்தையும் செயல்முறை ஆட்சியாக மாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர்களை மேலும் வலுப்படுத்தி, மனிதநேய அரசியலை வழிகாட்டியாகக் கொண்டு மக்கள் நம்பிக்கையை வென்று வரும் கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதிக்கு (மு.க. ஸ்டாலின்) எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நல்ல உடல் தேக ஆரோக்கியத்துடன், தளராத மனவலிமையுடனும் தொடர்ந்து மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட்டு, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் துணையாக இருக்க பிரார்த்திக்கிறேன். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெருவெள்ளமாக திரட்டி, மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சமத்துவம், வளர்ச்சி, மனிதநேயம் ஆகிய அடிப்படைகளில் மக்கள் நல ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் தளபதியாருக்கு (மு.க. ஸ்டாலின்) எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/01/ops-mks-dmk-join-1-2026-03-01-11-58-02.jpg)