Advertisment

ஆற்றில் குளித்தபோது இளைஞர் பலி! 

Young man passed away while bathing in river!

திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடக்கரை சோதனைச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் வனராஜா. இவரது மகன் சசிகுமார்(27). இவர் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தாய் வனஜா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சசிக்குமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe