Advertisment

சென்னையில் கடைப்பிடிக்கப்பட்ட சர்வதேச யோகா தினம் (படங்கள்)

Advertisment

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகள் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.-வைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக பலர் வீடுகளிலேயே யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

இந்திய ராணுவ வீரர்கள் லடாக் - திபெத் எல்லையில் லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் யோகா செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவை பயிற்சி மையத்தில், சர்வதேச யோகா தின பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

சென்னை அரும்பாக்கம் அண்ணா சித்தா மருத்துவமனையில் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சியைச் செய்தனர்.

Chennai INTERNATIONAL YOGA DAYS Photos
இதையும் படியுங்கள்
Subscribe