Advertisment

நேற்று வந்த ஓபிஎஸ் - இபிஎஸ் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது: கேசிபி

kc.palanisamy

Advertisment

பிஜேபி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் . நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி இன்று காலையில் பேட்டி அளித்தார். அதாவது, தெலுங்கு தேசம் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமார்? என்ற கேள்விக்கு காவிரி பிரச்சனையில் துரோகம் செய்வதால் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று பதில் அளித்தார் கேசிபி.

கேசிபியின் அளித்த இந்தப்பேட்டியால் பெரும் சர்ச்சை உருவானது. இதையடுத்து கே.சி பழனிச்சாமி அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து கேசிபி, ‘’உடனே நீக்கும் அளவிற்கு நான் என்ன பேசிவிட்டேன்? எனது கருத்து கட்சியின் கருத்தல்ல என தெரிவித்திருக்கலாம். அதிமுகவில் இருந்து என்னை ஓபிஎஸ்- இபிஎஸ் நீக்கியது செல்லாது. மோடியைக்கண்டு பயந்து என் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். நேற்று வந்த ஓபிஎஸ் -இபிஎஸ் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்துவிட்டு என்னை நீக்கட்டும். அதிமுக கட்சி விதி திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. ஆணையம் ஏற்காததால் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது. இதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி நான் அறிந்துகொண்டேன்.

Advertisment

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டால் நான் பேசியது தவறு. தமிழக நலனை பாதுகாக்க 30ம் தேதிக்குள் அமைத்துவிட்டால் நான் பேசியது தவறு. காவிரி மேலாண்மை வாரியத்தை ஓபிஎஸ், இபிஎஸ் பெற்றுவிட்டால் அரசியலிலிருந்து விலக தயார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நான் பேசியது சரி’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

cauvery CSB did not set up I was right Management wrong
இதையும் படியுங்கள்
Subscribe