உலக சுகாதாரதினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்.நமக்காகவும், பிறரின் நலனுக்காகவும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.உறவினர்களுக்கு மட்டுமின்றி கரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர், செவிலியருக்காகவும் பிரார்த்தியுங்கள்" என்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.