Advertisment

தமிழிசை குறித்து அவதூறாக பேசியதாக பெண் கைது!

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக கருத்து பரப்பியதாக சூர்யாதேவி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பெண் ஒருவர் அவதூறாக பேசும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அவதூறாக பேசிய அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநில செயலாளர் அனு சந்திரமவுலி உள்ளிட்ட நிர்வாகிகள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

பாஜக நிர்வாகிகளின் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், முதலில் அந்த பெண் பேசிய வீடியைவை வைத்து அவரது முகநூல் மூலம் அவரின் விவரங்களை சேகரித்து சூர்யாதேவி என்பவரை விருகம்பாக்கத்தில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

tamilisai
இதையும் படியுங்கள்
Subscribe