edyu

கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள். இதில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்கட்சியான பாஜகவும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் என மும்முனை போட்டி நடைபெறுகிறது.

Advertisment

இந்த தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்கிறது என கர்நாடகாவில் உள்ள ஊடகங்கள் பரபரப்பான சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆளும்கட்சியான காங்கிரஸ் 90 முதல் 107 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் பாஜக 60 முதல் 80 வரையான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் மதசார்பற்ற ஜனதாதளம் 25 முதல் 35 வரையான தொகுதிகளை பெறும் என்று அந்த கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

Advertisment

இதில், ஆளும் கட்சியான காங்கிரசே அதிகப்படியான இடங்களை பெறும் என்று பெரும்பாலான ஊடகங்கள் கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ளன. எப்படியேனும் காங்கிரஸ் தனி பெரும்பான்மை பெறவில்லை என்றால் மதசார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவு காங்கிரசிற்கு நிச்சியம் தேவைப்படுகிறது.

அதேபோல், ஒருவேளை காங்கிரசை பின்னுக்கு தள்ளிவிட்டு, பாஜக முன்னுக்கு வந்தாலும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது. யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? சித்தராமையாவா? எடியூரப்பாவா? அல்லது குமாரசாமியா? என கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு பற்றி உள்ளது. நாளை வாக்குப்பதிவு முடிந்து 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Advertisment