“காசாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” - உலக சுகாதார நிறுவனம் வேதனை 

WHO President says about Gaza

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்குஇடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காசாவின் அவலநிலை குறித்து உலக சுகாதாரம் நிறுவனம் தனது வேதனையை தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்டோஸ் அதானோம் கூறியிருப்பதாவது, “காசாவில் அனஸ்தீசியா (Anaesthesia) கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன. உயிரிழந்தவர்களில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த நிலையை எடுத்துரைக்க என்னால் இயலவில்லை. சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.

israel palestine Who
இதையும் படியுங்கள்
Subscribe