/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/whatsapp 4522.jpg)
உலகின் பல்வேறு நாடுகளிலும்வாட்ஸ் அப் சேவைமுடங்கியது. வாட்ஸ் அப் செயலி திடீரென முடங்கியதால், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர். வாட்ஸ் அப் செயலி முடங்கியது குறித்ததகவல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதேபோல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் அப்-பை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 கோடிக்கும் அதிகமான மக்கள் நாள்தோறும்பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் பிரபலமான செயலி என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப் முடங்கியது குறித்து அந்நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Follow Us