வாட்ஸ்அப்பில் கரோனா தொடர்பான வதந்தி பரவுவதைத் தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதன்படி வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அதிகமுறை ஃபார்வர்டு ஆன தகவலை ஐந்து நபர்களுக்கு பதில் இனி ஒருவருக்கு மட்டுமே ஒருவர் அனுப்ப முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.