Advertisment

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் இன்று என்ன தீர்ப்பு வழங்கப்படலாம்?

முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக் கோரி கடந்த ஆண்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார்.

Advertisment

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில், மற்ற 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 24ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பிற்பகல் 1 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படலாம்?

சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது.

18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் - சபாநாயகர் முடிவு சரி.

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது - சபாநாயகர் முடிவு தள்ளுபடி.

இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினால் அதன் பின்னர் வேறொரு நீதிபதிக்கே வழக்கு பரிந்துரை செய்யப்படலாம்.

இந்த மூன்றில் ஒன்றை நீதிபதிகள் தீர்ப்பாக வழங்க வாய்ப்பு உள்ளது.

18 MLA's case ops_eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe