Advertisment

உங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்து இருப்போம்: ராஜீவ் நினைவு நாளில் ராகுல் உருக்கம்!

உங்களை விரும்பும் அனைவரும் உங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்து இருப்போம் என தந்தை ராஜிவ் காந்தி நினைவு தினமான இன்று டிவிட்டரில் ராகுல் காந்தி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினத்தையொட்டி சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் அவரது நினைவு இடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ராஜீவ் நினைவு தினத்தையொட்டி ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

Advertisment

வெறுப்பை சுமந்து செல்பவர்களுக்குதான் அது சிறை. அனைவர் மீதும் அன்பு செலுத்த வேண்டும். அனைவரையும் மதிக்க வேண்டும் என எனது தந்தை கற்றுக் கொடுத்துள்ளார்.

தந்தையாக ஒரு மகனுக்கு அவர் வழங்கிய விலை மதிப்பற்ற பரிசுகளுக்காக அவருடைய இன்றைய நினைவு நாளில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களை விரும்பும் அனைவரும் உங்களை எப்போதும் இதயத்திலேயே வைத்து இருப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

Rahul gandhi rajiv ganthi
இதையும் படியுங்கள்
Subscribe