/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks88.jpg)
கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கோரிய வழக்கில் 14 மணி நேரம் நடந்த பரபரப்பான வாதத்திற்கு பின்னர் உயர்நீதிமன்றம், கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை கேள்விப்பட்டதும் ராஜாஜி ஹாலில் நின்றிருந்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கண் கலங்கினார். பின்னர் தொண்டர்களின் முழக்கதால் மகிழ்ந்த அவர், பின்னர் கதறி அழுதார். உடன் இருந்த ஆ.ராசாவும், துரைமுருகனும் அவரை தேற்றினர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளூம் கண் கலங்கினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin rajaji.jpg)
Follow Us