ரசிகர் மன்றத்தினருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி; தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்க்கும் சூர்யா,கார்த்தி 

v

கஜா புயலின் கோரத்தாண்டவத்தினால் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சின்னாபின்னமான இந்த மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர், உணவு இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் உதவிகள் அளிக்க முன்வந்துள்ளனர்.

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சார்பில் 50 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தொண்டு நிறுவனங்களூடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிகளை செய்யவுள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 லட்சம் நிவாரணப்பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளார். நிவாரணம் தேவைப்படுவோரை ரசிகர் மன்ற மூலமாக கண்டறிந்து உதவி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

karthi Surya Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe