திருச்சி காவல்துறை ஆய்வாளர்அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கதிருச்சி மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisment

அதில், விஜய் ரசிகர் மன்றமானது 2008 -ஆம் ஆண்டு, ஜூன் 23 -ஆம் தேதி மக்கள் இயக்கமாக, விஜய் அவர்களால் மாற்றி அமைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை, மக்கள் இயக்கத்தின் தலைவர் விஜய் மட்டுமே.

பல்வேறு தவறுகள், குற்றங்கள் செய்து விஜய்யின்நேரடி கவனத்திற்கு வந்து மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர் பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா. எனவே இவருக்கும் மக்கள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருந்தும் விஜய்யின் அனுமதியில்லாமல் விஜய்யின் பெயரையும் இயக்கத்தின் பெயரையும் பயன்படுத்தி கட்சி ஆரம்பித்துள்ளார்.

Advertisment

எனவே, அவ்வாறு பயன்படுத்திய மேற்சொன்ன பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா என்பவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் விஜய்யின் பெயரையோ, புகைப்படத்தையோ, 'அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்க'த்தின் பெயரையோ பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும் என்றும் திருச்சி மேற்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் திருச்சி மாவட்ட தலைவர் கொடுத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.